அடுத்தடுத்து அதிரடி ! போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து விரைவில் முதல்வர் விஜய் ஆலோசனை

 
சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மதுபான கடைகளில் விற்பனை முறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரைவில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதும் பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சட்டம் ஒழுங்கை சீராக கையாள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பொறுப்பேற்றுடன் முதல் கையெழுத்தாக பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி திட்டம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போதை பொருள் தடுப்பு படை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடனும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் விரைவில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டங்களில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரிவாக கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் அரசு திட்டங்கள் இன் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் விரிவாக கேட்டறிந்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.