கிருஷ்ணசாமிக்கு "தகைசால் தமிழர் விருது" வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் விஜய் - சௌமியா அன்புமணி பெருமிதம்..!

 
1

2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சுதந்திர தின நாளில், தமிழ்நாட்டுக்கும் தமிழின வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய பெருமக்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதலாவது தகைசால் தமிழர் விருது மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2022-ல் மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, 2023-ல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 2024-ல் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், 2025-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, முதல்வர் விஜய் அரசின் முதலாவது தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரான கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய கிருஷ்ணசாமிக்கு "தகைசால் தமிழர் விருது" வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் விஜய்.இந்த விருதுடன் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.


யார் இந்த கிருஷ்ணசாமி?

மூத்த தமிழக காங்கிரஸ் தலைவரான ம. கிருஷ்ணசாமி, முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்ட ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இவருடைய தாய்வழி தாத்தாவானது கே. விநாயகம், ஒரு மூத்த சுதந்திரப் போராட்ட வீரராவார். இவர் திருத்தணியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

சமீப காலமாக சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமான கருத்துகளை முன்வைத்து மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி இவரது சொந்த மகள். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே விஷ்ணு பிரசாத் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் ஆரணி மற்றும் கடலூர் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், செய்யார் தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் சௌமியா அன்புமணி,

தமிழ்நாட்டிற்காக அரும்பணி ஆற்றிய தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் "தகைசால் தமிழர் விருது" பெறும் எனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான திரு.M.கிருஷ்ணசாமி (EX MP) அவர்களுடனான மகிழ்ச்சிகரமான தருணத்தில்.!