சொன்னதை செய்தி காட்டிய முதல்வர் விஜய்..! அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்..!

 
1

தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தாலும் பூரண மதுவிலக்கு அவசியம் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்ட தருணத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றவுடன் தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ் நிலையங்கள் அருகில் உள்ள 717 கடைகளை 2 வாரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவில் கூறி இருந்தார். ஆனாலும் சில கடைகளை மூடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தது.

இந்நிலையில், முதல்வர் உத்தரவுப்படி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில கடைகள் மூடப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு விட்டன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.