முதலமைச்சர் விஜயின் நாளைய திருச்சி பயணம் ரத்து

 
s

முதலமைச்சர் விஜய்யின் நாளைய திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொளத்தூர் எம்.எல். ஏ பாபுவின் மறைவை அடுத்து முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் திருச்சியில் அரசு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைப்பதாக இருந்தது. 

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் வந்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 70 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.  இந்நிலையில் இன்று கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு  உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எதுவும் பலனளிக்கவில்லை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.