நாளை புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

 
விஜய்

முதலமைச்சர் விஜய் நாளை புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நாளை புதுக்கோட்டை செல்லும் முதலமைச்சர் விஜய், ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட  புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கத்தை திறக்கவுள்ளார்.  அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய். புதுக்கோட்டை நகரில் சுமார்  - 20 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்தவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.