அம்பையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ

 
Vijay

குழந்தைகள் தினத்தை ஒட்டி அம்பாசமுத்திரம் செல்லும் முதலமைச்சர் விஜய், 25 கிமீ வரை ரோடு ஷோ செல்ல உள்ளார். 

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம், அடுத்து நடைபெற உள்ள ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது. விஜய் இன்னும் நேரடி பிரச்சாரத்தில் இறங்கவில்லை என்றாலும், கட்சியினர் களத்தில் இறங்கிவிட்டனர். ஒருபக்கம் சுவர் விளம்பரங்கள், மறுபக்கம் கறி விருந்துகள், வீடு வீடாக வேட்பாளர்கள் பயணம் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் தான் தவெக தலைமைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதில், ஐந்து தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவெகவுக்கு சவாலானதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் குழந்தைகள் தினத்தை ஒட்டி அம்பாசமுத்திரம் செல்லும் முதலமைச்சர் விஜய், 25 கிமீ வரை ரோடு ஷோ செல்ல உள்ளார்.  
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் 14ஆம் தேதி முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை-பாபநாசம் சாலையில் ரோடு ஷோவிற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.