திறந்த ஜீப்பில் சென்றபடி அணிவகுப்பை ஏற்கும் முதல்வர் விஜய்
Updated: Aug 15, 2026, 08:48 IST1786763932193
சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். திறந்த ஜீப்பில் சென்றபடி காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்ற உள்ள நிலையில், அமைச்சர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மஞ்சள் புடவை அணிந்தபடி நடிகையும், முதலமைச்சரின் தோழியுமான த்ரிஷா பங்கேற்றுள்ளார். முதல் வரிசையில் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபாவுக்கு அருகிலேயே த்ரிஷாவும் அவரது தாய் உமாவும் அமர்ந்துள்ளனர்.

