சென்னை மழை பாதிப்பு குறித்து ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு

 
 சென்னை மழை பாதிப்பு குறித்து ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் CM விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னைக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அமைச்சர்கள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இக்கூட்டத்தில்  பங்கேற்றனர்.  மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கு அழைப்பு இல்லை.