மின்வாரிய அலுவலுகத்திற்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்...பதறிய அதிகாரிகள்..!!

 
Q

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகளும் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இன்று (செப் 23) திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநிலத்தில் நிலவும் மின் உற்பத்தி மற்றும் மின் தேவையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நிர்மல் குமார், அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பிறகு ஆய்வை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய் காரில் புறப்பட்டு சென்றார்.

ஆய்வு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்களை உருவாக்கும் பணிகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வு செய்தோம்;

மின் தேவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்; தேர்தலுக்காக பராமரிப்பு பணியை தள்ளிப் போட்டதால், தற்போது பழுது ஏற்படுகின்றன.

மின்தடைக்காக மக்கள் கோபப்படாமல், சீரமைக்க அவகாசம் தர வேண்டும்; தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்கள் தேவை, 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீரமைப்பு செய்யப்படாத நிலையில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன; 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலைய மேம்பாடு குறித்த திட்டத்தை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.