மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..!!
Jun 26, 2026, 09:41 IST1782447108676
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘start run, stop drugs’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே, இந்த மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
மாரத்தானை தொடங்கி வைத்ததோடு, மக்களோடு மக்களாக இணைந்து முதலமைச்சரும் ஓட்டத்தில் பங்கேற்றார். அவருடன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதியமைச்சர் மரிய வில்சன், உணவு பாதுகாப்புத்துறை வெங்கட்ரமணன் ஆகிய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

