30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!

 
முதல்வர் நாற்காலியில் விஜய்!

போதைப்பொருள் குற்றங்களை விரைந்து விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், POCSO சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்களும் அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. NDPS சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக தமிழகத்தில் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் (26 POCSO, 4 NDPS) அமைக்க ரூ. 46.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.