CPI தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

 
CPI தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

டெல்லியில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவை முதல்வர் விஜய் சந்தித்தார்.

Image

3 நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குடியரசு தலைவரை குடியரசுத் தலைவர் மளிகையில் சந்தித்து பேசினார்.  பின்னர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவர் மளிகையில் மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுலை சந்தித்தார். 

Image

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜாய் பவனுக்குச் சென்றார். கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ண பாண்டா, மூத்த தலைவர்கள் பல்லப் சென் குப்தா, கே. நாராயணா ஆகியோரை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்.