சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்னர் காரில் ஏறும் முன் சூழ்ந்திருந்த பொதுமக்களுக்கு கையசைத்து சென்றார்..

சென்னை சேத்துப்பட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. காய்கறி, உணவுக்கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மையத்தில் சென்னையில் சேகரிப்படும் கழிவுகள் மூலம் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் மையங்கள் செயல்பட்டுவருகிறது. அந்த திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈர கழிவுகளை தனியாக பிரித்து இதுபோன்ற உயிரி எரிவாயு தயாரிப்பு நிறுவனத்தை அமைப்பதன் மூலம் பயோ சிஎன்ஜி உற்பத்தி செய்யலாம். கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆய்வை முடித்துவிட்டுப் புறப்பட்டபோது, அப்பகுதி பொதுமக்கள் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் ஏறும் முன் சூழ்ந்திருந்த பொதுமக்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

