எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மூன்றாவது தளத்தில் மகப்பேறு துறையில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆய்வு செய்த முதல்வர் விஜய், மக்களுக்கு தரமான, விரைவான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
சமூக வலைதளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் விஜய் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்ததோடு அதை நிவர்த்தி செய்வதாகும் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இதே மருத்துவமனையில் தான் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

