சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு கால்வாயில் முதல்வர் விஜய் ஆய்வு
Oct 14, 2026, 17:25 IST1791978945600
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவு பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஒக்கியம் மடுவில் மணலை அகற்றி 8மீ அகலத்துக்கு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக புதிய சுற்றுக்குழாய் அமைக்கும் 3,108 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

