செம்பரம்பாக்கத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

 
விஜய்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் திரும்பி வரும் வழியில், தன்னை வரவேற்க காத்திருந்த மக்களை முதலமைச்சர் விஜய் இறங்கி வந்து உற்சாகப்படுத்தினார். 

மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். ஏரியின் நீர்மட்டம், உபரி நீர் திறப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அசம்பாவிதங்களைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், திரண்டிருந்த தொண்டர்களை சாலையில் நடந்து சென்று முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்தார்.