தீவிர ஆலோசனையில் முதலமைச்சர் விஜய்- ரீல்ஸ் எடுத்து விளையாடிய அதிகாரி?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயின் அறையில் நடைபெற்ற ஆலோசனையை ரீல்ஸ் ஆக பதிவு செய்த ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன்படி இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் பிறகு இவர்கள் அனைவரும் முதலமைச்சரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் அதை வீடியோ பதிவு செய்து ரிலீஸாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அறையில் நடைபெற்ற சந்திப்பில் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் அறையில் ரீல்ஸ், அதிகாரியின் செயலால் அதிர்ச்சி! pic.twitter.com/rCJAKe683R
— Spark+ (@SparkPluz_) May 19, 2026
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது, அரசு அதிகாரி ஒருவர் அதை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக பதிவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், வீடியோ எடுத்தவர் அரசு அதிகாரி அல்ல, மாற்று திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜயின் அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுத்ததாக சிம்மச்சந்திரன் விளக்கம் அளித்துள்லார்.

