சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை

 
s

தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து பேசினர். 

Image

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் சில சிறைகளில், சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியது, போதைப்பொருள் கடத்தியது, கைதிகளுக்கு இடையே மோதல், சிறை ஊழியர்களுக்கு மிரட்டல் போன்ற சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் வந்தன. சிறைகளில் இருந்து கைதிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இதை இனி ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. சிறை என்றால் திருந்துவதற்கான இடமாக இருக்க வேண்டும், குற்றங்கள் தொடரும் இடமாக இருக்கக்கூடாது என்று முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். அதற்காக தான், சிறை பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து, நவீனப்படுத்த, இந்த உயர்மட்ட குழுவை அமைத்திருக்கிறார். அந்த குழு தான் இன்று முதல்வரை சந்தித்து, தங்களது ஆய்வு மற்றும் பரிந்துரைகளை எடுத்து சொன்னது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் சிறைகள், திறந்தவெளி சிறைகள் அனைத்திலும் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்துவது, சிறைக்குள் செல்போன் சிக்னலை முடக்கும் ஜாமர் கருவிகள், CCTV கேமராக்கள், பாடி ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றை நவீனப்படுத்துவது, கைதிகளை சந்திக்க வருபவர்கள், உணவு பொருட்கள், உடைகள் ஆகியவற்றை இன்னும் தீவிரமாக சோதனை செய்வது, சிறை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நவீன பயிற்சி கொடுப்பது, கைதிகளின் மனநலம், திருந்தி வாழ்வதற்கான பயிற்சி, தொழில் பயிற்சி, கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

முதல்வர் விஜய்-யின் இந்த நேரடி கண்காணிப்பு, தமிழ்நாட்டு சிறைச்சாலைகளை இந்தியாவிலேயே முன்மாதிரி சிறைகளாக மாற்றும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உயர்மட்ட குழுவின் முழு அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல அதிரடி உத்தரவுகள் வரும் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.