கோட்டையில் கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்
Updated: Aug 15, 2026, 08:54 IST1786764248905
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலாவதாக கோட்டையில் 'இந்திய தேசிய கொடி' - யை ஏற்றினார் முதலமைச்சர் விஜய். பின்னர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்

80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திர வாங்கிதந்தவர்களை நினைவுக்கூர்வோம். அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்று சேரும்போது, சாதி, மதம், இனம் அனைத்து உடைந்து நொறுங்கும். தமிழகத்துக்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போம்” என்றார்.

