ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தனுக்கு வாழ்த்துக்கள்.
கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

