600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் விஜய்!

 
600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள்  வழங்கிய முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை பதக்க விழா நடைபெற்றது. விழாவில் குடியரசுத்தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கபட்டன. விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், 600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கங்களை  வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து கடலோர பகுதி காவல்நிலையங்களுக்காக 42 மகேந்திரா தார் ராக்ஸ் கார்கள், 96 ஹோண்டா யூனிகார்ன் பைக்குகள் வழங்கப்பட்டன. காவல் துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், மோப்ப நாய் ஒன்று பூங்கொத்து கொண்டு வந்ததை முதல்வர் விஜய் கண்டு ரசித்தார்