பெண்களைப் பற்றி யாரும் எவரும் அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் - முதலமைச்சர் விஜய்..!

 
1

சட்டப்பேரவையில் இன்று (செப்.7) முதலமைச்சர் விஜய் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகிறார். “சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது இடையூறு செய்வது சரியாக இருக்காது. எந்த ஒரு விஷயத்தை பேசும்போதும் சரியாக பேச வேண்டும். அதற்காக தயார் செய்து வருவதில் தவறில்லை. ஆமாம், நானும் முன் தயார் செய்து தான் பேசியுள்ளேன்” என விஜய் கூறினார். சட்டப்பேரவையில் தனது உரைக்காக முன்கூட்டியே தயாராகி வந்ததை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது.

மேலும் அவர் பேசியதாவது,”கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டும். மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த உறுப்பினர்களின் பேச்சை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். பெண்களை தரம் தாழ்ந்து பேசுவதெல்லாம் வேண்டாம்.

தமிழ்நாட்டில் சில நாட்களாக ஆபாச நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களைப் பற்றி இழிவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெண்களைப் பற்றி யாரும் எவரும் அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். அரசியல் கால் புணர்ச்சியில் முதல்வர் பேசுகிறார் என்று யாராவது நினைத்தால் நான் பொறுப்பாக முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். வரும் காலங்களில் அது போன்ற நிகழ்வுகள் பெண்களுக்கு நடந்து விடக்கூடாது. அரசியல் ரீதியாக ஹார்ஷான கமெண்ட்கள் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் பெண்கள் குறித்து இழிவாக பேச கூடாது.

நான் அட்வைஸ் செய்யவில்லை. இதுதான் ரியாலிட்டி. மக்கள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்றால் அவர்களுக்கு நல்ல சாவே வராது என சிலர் பேசுகிறார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத மனது இல்லை என்றால் இவர்கள் ஏன் அரசியலுக்கு இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் வருகிறது” என ஆவேசமாக கூறினார்.