மாநில வருவாயை பெருக்க குழு அமைப்பு- முதல்வர் அதிரடி

 
ச்

மாநில வருவாய் பெருக்க மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மாநில வருவாயைப் பெருக்க வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்குழுவில் 6 பேர் உள்ளனர். வரி, வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்குதல், புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசிடம் 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மான்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) ஓர் புகழ்பெற்ற இந்தியப் பொருளியலாளரும், முன்னாள் இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவரும் ஆவார். இவர் இந்தியாவின் முன்னணி பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை த.வெ‌.க அரசு கடன் வாங்கியுள்ளதாகவும், இந்த முழு ஆண்டிலே இன்னும் 1.22 லட்சம் கோடி கடன் வாங்க  திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி முதல்வர் விஜய் குறித்தும், அரசு நிர்வாகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இத்தகைய முடிவை விஜய் தமிழக அரசு தலைமையிலான வெதவெக அரசு எடுத்துள்ளது.