போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

 
stalin

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

stalin

தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிர்படுத்தி உள்ளது.

stalin

இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம், மாவட்ட வாரியான நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது.