தலைமைச் செயலகத்தில் இடம் மாறும் முதலமைச்சர் அறை
Jul 21, 2026, 17:47 IST1784636248983
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலக அறை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டிடத்தில் தற்போது முதலமைச்சர் அலுவலக அறை உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலக அறை மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு முதலமைச்சர் அலுவலக அறை மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜயை பார்க்க தினந்தோறும் வரும் விஐபிக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போதைய அறையில் போதிய இடவசதி இல்லை.

