"விஜய்.. விஜய்.. விஜய்.."- குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர்!

 
vijay

ஈரோட்டில் குழந்தை ஒன்றுக்கு ‘விஜய்’ என பெயர் சூட்டினார் முதலமைச்சர் விஜய். 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த அரவிந்த் - பூஜா ஸ்ரீ தம்பதியின் மூன்று மாத குழந்தைக்கு 'விஜய்' எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தியுள்ளார்.  தாய்மாமன் தங்க மோதிரத்தை அணிவித்து, குழந்தையின் தாய் விருப்பத்திற்கேற்ப குழந்தைக்கு விஜய் என பெயர் சூட்டினார். விஜய் என்ற பெயரை முதல்வர் விஜய் தான் வைக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில், சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்துள்ளார் பூஜா ஸ்ரீ. மூன்று மாத குழந்தையை தூக்கிக்கொண்டு ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வந்தீர்கள் என முதலமைச்சர் அக்கறையுடன் கண்டித்து கேட்டதாக குழந்தையின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.