5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

 
stalin

மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்  மதுரை மண்டலத்தில் முதலமைச்சர்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.   5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவைகளை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்தை கடந்த பிப்.1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் முதற்கட்டமாக  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இரண்டாவது கட்டமாக  சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அள ஆய்வு மேற்கொண்டார். தற்போது மூன்றாவது கட்டமாக  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்  மதுரை மண்டலத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

mk stalin

அதன்படி  இன்று மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.  மேலும் இன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள் சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.   பின்னர்  இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், நாளை ( 7-ஆம் தேதி)  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு , பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில்  சென்னை திரும்புகிறார்.