கர்நாடக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

 
stalin


கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்துமுடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் கடந்த 13ம் தேதியே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர் இழுபறி இருந்தது. அங்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.  இருதரப்பும் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதமாக இருந்ததால், கட்சி மேலிடம்  மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டியுள்ளது.  

கர்நாடக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

அதாவது, சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் ஒரே துணை முதல்வராக இருப்பார் எனவும்,  மேலும், மக்களவைத் தேர்தல் முடியும் வரை சிவகுமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் எனவும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  பதவியேற்பு விழா மே 20 ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.  ஒரே கருத்துள்ள கட்சிகளுக்கு  இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க்கப்பட்டுள்ளது. அதன்படி, பதவியேற்பு விழாவில் பங்கேற்க  தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக  அழைப்பு விடுத்துள்ளனர்.