அமைச்சர்களை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செக்- மு.க.ஸ்டாலின் அதிரடி

 
mkstalin

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

mkstalin

கடந்த மே தேதி 7 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் திமுக அரசு காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்வர் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அதே சமயம் திமுக பொருளாளரும்,  மூத்த தலைவருமான டி.ஆர். பாலுவின் மகனும் , மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியாக ஒருசில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

அமைச்சர்களை தொடர்ந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

அண்மையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் சில நிபந்தனைகளை ஏற்க அழுத்தம் தந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்து பலன் இல்லாததால் ராஜினாமா செய்கிறேன் என 🔸மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர்நேசன் விலகினார். இந்த குற்றச்சாட்டை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.