தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Oct 30, 2023, 08:50 IST1698636016878

மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.