மறைந்த தோழர் சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!

 
tn

தோழர் சங்கரய்யா மறைந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

tn
1921 ஆம் ஆண்டு ஜூலை நெல்லையில் பிறந்த சங்கரய்யா தனது இளமைக்காலம் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1986 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும்,  1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராகவும் பணியாற்றினார்.

tn

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு சமீபத்தில் பரிந்துரைத்த நிலையில் ஆளுநர் அதற்கான ஒப்புதலை அளிக்காதது சமீபத்தில் சர்ச்சையானது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரய்யா இன்று உயிரிழந்தார் . அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.