முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்..!

 
1

 தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்தது. மேலும் தமிழகத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.இதற்கு முன்பு 2011 தேர்தலில் தமிழ்நாட்டில் 78.3 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. இந்த முறை, கடந்த தேர்தலை விட தமிழ்நாட்டில் சுமார் 11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இம்முறை சுமார் 25 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.அதிக வாக்குப்பதிவு சதவீதத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் நான்கு நாட்கள் அமைதியாக ஓய்வு எடுப்பதற்காக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுற்று பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களுடன் செல்கிறார். இது முற்றிலும் ஒரு குடும்ப பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு செல்கிறார். ஏப்ரல் 28ஆம் தேதி வரை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அங்கு தங்கி ஓய்வெடுக்க உள்ளார். மேலும் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவர் தங்கும் விடுதி மற்றும் அவர் செல்ல வாய்ப்புள்ள சுற்றுலா தலங்களில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வருகையொட்டி போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய மனைவி மற்றும் மகள் மகனுடன் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அவர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது