தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கத்தில் இன்று (பிப்ரவரி 09) தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்!
2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.
மீதமுள்ள,
* 24 மாநகராட்சிகளில் 48,768 பேர்,
* 145 நகராட்சிகளில் 29,556 பேர்,
* 479 பேரூராட்சிகளில் 21,910 பேர் என மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திமுக அரசு..
இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


