இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

 
cm stalin

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

stalin

இதன் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் மூலம்  ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அத்துடன் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வார் என்று சொல்லப்பட்டது.

stalin

இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் பயணம் மேற்கொள்கிறார். ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிதிகளை சந்திக்கிறார்; 10 நாட்கள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் செல்லும் முதல்வர் பிப்.7இல் மீண்டும் சென்னை திரும்புகிறார்.