மழைவெள்ள பாதிப்பு : குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு!

 
cm stalin

குமரி மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார் .

rain

குமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால் இம்மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறி போயுள்ளது. இன்றும், நாளையும் குமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அதி கனமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை 8மணிக்கு  சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் ஸ்டாலின், காலை 8.40 மணிக்கு மதுரையை அடைகிறார். பின்னர் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார். இதை தொடர்ந்து காலை 9.40 மணிக்கு, திருநெல்வேலி பணகுடி பகுதியில் மழை பாதிப்பை பார்வையிடுகிறார்.

stalin

இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடும் அவர்,  11.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை , பிற்பகல் 12.40க்கு மனவாளகுறிச்சி  பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிடுவதுடன், மதியம் 1.30மணிக்கு, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு உண்கிறார். இதையடுத்து மாலை 3 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.