87 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108 அவசரகால ஆம்புலன்ஸ்’ சேவையை கடந்த 2008 செப்.15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். EMRI GHS என்ற தனியார்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1,353 அவசரகால ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இந்த சேவை மூலம் கர்ப்பிணிகள், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என 85.98 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த சேவையை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.18.90 கோடியில் 87 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பணிநியமன ஆணை: வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு 36 பேர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு 24 பேர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்
வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமனம்வழங்கும் அடையாளமாக பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் விருதுநகர், தேனி,திருவள்ளூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கான அரசு பொதுகபர்ஸ்தான்களும் (நல்லடக்கத்தலம்), மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கான அரசு பொதுக் கல்லறைத் தோட்டங்களும் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர், பெயர்ப் பலகை உள்ளிட்டஅடிப்படை வசதிகள் அமைத்துபராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கும் விதமாக அதற்கான ஆணையையும் அலுவலர்களிடம் முதல்வர் வழங்கினார்.


