"23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்வு" - கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கபில் சிபல் கடைசியாக 2001-2002ல் தலைவராக இருந்தநிலையில், 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் SCBA தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Congratulations to Senior Advocate @KapilSibal on being elected as the President of the Supreme Court Bar Association!
— M.K.Stalin (@mkstalin) May 17, 2024
His victory ensures that the independence of the bar and our constitutional values are in safe hands. We are confident in his leadership to uphold justice and…

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.