எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களித்தார்..!

 
1

சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். பிறகு நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். ஒரே வரியில் சொல்கிறேன்; தமிழகம் வெல்லும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.