தமிழ்நாடு வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

stalin

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசியதுடன், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.  ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.