இனி 30 நிமிடங்களில் தரிசனம்- திருப்பதி பாலாஜி தரிசன திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
Jul 13, 2026, 17:16 IST1783943197706
திருப்பதி பாலாஜி தரிசன திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டத்தின் கீழ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி இலவச தரிசனம் மேற்கொள்ளலாம். இதற்கான புகைப்படம் கூடிய அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட S-1- கவுண்டரில் காட்டினால் போதுமானது. இதன் மூலம் வயதானவர்கள் 30 நிமிடங்களில் தரிசனம் செய்துவிட்டு வெளியில் வர முடியும். தரிசனத்திற்கு பிறகு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர்சாதம், சூடான பால் வழங்கப்படும். இந்த தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. தரிசன வரிசையில் சேர்ந்தவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம்.

