போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொண்டு தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை முறைப்படி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்கியது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு சுகாதாரத் துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் வழங்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் விஜய்.#cmjosephvijay #cmvijay #poliodrops pic.twitter.com/vgqtt4ArU6
— Top Tamil News (@toptamilnews) June 28, 2026
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

