"2026-ல் முதல்வர்... 2029-ல் இந்திய பிரதமர்!" – தேனியில் த.வெ.க-வினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
தேனி வடக்கு மாவட்டம், தேனி நகரம் 23-வது வார்டு சார்பில் ஒட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த போஸ்டரில், த.வெ.க. தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன் பல்வேறு அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, “2026-ல் தமிழகத்தின் வெற்றி முதலமைச்சர்... 2029-ல் இந்தியாவை ஆளப்போகும் நாளைய பிரதமர்” என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பேரறிஞர் அண்ணாவின் “வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது...” என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் குறிப்பிட்டு, அதனை மாற்றும் வகையில் தெற்கிலிருந்து வரும் இளம் வரலாறு விஜய் எனப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையிலான வாசகங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
விஜய்யை 2029-ம் ஆண்டுக்கான பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கருத்துகள் த.வெ.க. ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடையேயும் கருத்து வேறுபாடுகள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தேனி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


