தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு- தலைமை ஹாஜி அறிவிப்பு

 
ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி தாவூத் கைஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறை தேட வேண்டிய நாளான 18.02.2026 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம்,திருக்களாச்சேரி பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. எனவே 18.02.2026 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.