சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை

 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதலே சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டு, விட்டு லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் காற்று, மழையால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி  வைத்துள்ளனர்.


கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.