மக்கள் ஆதரவுடன் கோலாகலமாக நடைபெறும் செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0!
நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் “Chettinaadu Business Expo 3.0” கண்காட்சி, நேற்று கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் மற்றும் VS மருத்துவமனைகளின் தலைவரும், புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் பேராசிரியர் எஸ். சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட வர்த்தகக் கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி வருகின்றன. கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
NCC Day நிகழ்வு

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் “NCC Day” சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் பிரபு மற்றும் ஆந்திரா வங்கியின் முன்னாள் தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நகரத்தார் சமூகத்தின் தொழில் மற்றும் வணிக பாரம்பரியம், தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகள், வணிக வளர்ச்சியில் ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0 வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0-க்கு ஆதரவு அளித்த ஸ்பான்சர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

மேலும், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களை நகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அபி ராமநாதன், செயலாளர் T.முத்துராமன், பொருளாளர் V.கண்ணம்மை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் S.ராமு, M.சுப்பிரமணியன், Ampa பழனியப்பன் உள்ளிட்டோர் வரவேற்று, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
மக்கள் மற்றும் தொழில்துறையினரின் வரவேற்புடன் நடைபெற்று வரும் Chettinaadu Business Expo 3.0, செட்டிநாட்டின் பாரம்பரியத்தையும் நவீன தொழில் வளர்ச்சியையும் இணைக்கும் முக்கிய வர்த்தகத் தளமாக அமைந்துள்ளது.

