44வது செஸ் ஒலிம்பியாட் 2022 - அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

 
ttn

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (14.05.2022) தலைமைச் செயலகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44" Chess Olympiad - 2022) நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு (AICF) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடை பெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடை பெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே (AICF) கையெழுத்தானது.

ttn

இதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியில் பங்கேற்கவுள்ள சதுரங்க வீரர் / வீராங்கனைகள்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்துவாழ்த்துப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் - காலநிலை  மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சிவ. வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.