எப்போது வெற்றி பெற்றாலும் முதல்வர் வீட்டுக்கே அழைத்து ரொக்க பரிசு கொடுப்பார்- குகேஷ்
நான் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்களும் பக்கபலமாக இருந்தார்கள் என உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பட்டம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் திரு குகேஷ் தொம்மராஜூக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியின் கேரள பிராந்திய முதல்வரும், மண்டல இயக்குநருமான டாக்டர் ஜி கிஷோர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு ஜெ மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், “எப்போதுமே இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எப்பொழுது நான் வெற்றி பெற்றாலும் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, ரொக்க பரிசு கொடுக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி! தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் எனது வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதில் வென்றதால்தான்க்கு candidates தொடரில் விளையாட வாய்ப்பே கிடைத்தது. எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்வது என நிறைய விசயங்களில் தமிழ்நாடு அரசு உதவிகள் செய்கிறது” எனக் கூறினார்.