செஸ் ஒலிம்பியாட் 2022 - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!

 
tn

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் நிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் வரை செஸ் போட்டி நடைபெறுகிறது.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட்  போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் சென்னையில் 7 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது  ட்விட்டர் பக்கத்தில் , செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு , நான் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு ,  செஸ் போட்டியில் பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர்கள்  அனைவருக்கும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் மற்றும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். 187 நாடுகளை சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் பங்கேற்கின்றனர்.  செஸ் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஆல் இந்தியா செஸ் அசோசியேஷன் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.