செஸ் ஒலிம்பியாட் 2022 - சென்னையில் டிரெண்டாகும் செஸ் கோலங்கள்!!

 
ttn

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை மாநகரமே செஸ் தீமில் உருமாறி உள்ள நிலையில் பலரும் செஸ் கோலங்கள் போட்டு  சிறப்பித்து வருகின்றனர்.

tn

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழாவை சிறப்புற தொடங்கி வைத்தார். 186 நாடுகளை சேர்ந்த 2000ற்கும்  மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள்  இப்போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் செஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.  அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் பலரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 



இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் பலரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பெண்கள் பலரும் செஸ் கோலங்கள் போட்டு சிறப்பித்து வருகின்றனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில்  சென்னை அண்ணாநகரில் தேநீர் கடையில் முழுவதும் செஸ் குறித்த விழிப்புணர்வுடன் செஸ் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.