ஆவின் பால் பாக்கெட்டுகளில் 'தம்பி' விளம்பரம்!

 
tn

ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக  படங்கள் இடம்பெற்றுள்ளன.

chess

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியை  பிரதமர் மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். 

tn

இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான, "தம்பி" ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் இலச்சியான தம்பி மற்றும் செஸ் போர்டு படங்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளது